அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்; பாஜவினர் கலெக்டரிடம் மனு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக, பாஜவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் தலை விரித்தாடும் லஞ்சம் .. கழிப்பறைகள் இல்லாமல் நோயாளிகள் அல்லாளப்படும் அவலம் பாஜகவினர் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் கார்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர் . திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஏழ்மையான மனிதர்கள் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

இங்கு இலவச சிகிச்சைகள் மட்டுமே வழங்க வேண்டும் ஆனால் நிர்வாகத்தின் கடை நிலை ஊழியர் முதல் டீன் வரை அதிகார துஷ்பிரயோகம் செய்து லஞ்ச லாவண்யம் செய்து வருவதாகவும் .. ஸ்கேன் எடுக்க செல்லும் நோயாளிகளிடம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் .. கழிப்பறை இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .. மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்யும் ஊழியர்கள்

போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு 2000 லஞ்சம் கொடுத்தால் தான் போஸ்ட்மார்ட்டம் செய்வோம் எனவும் பக்கெட் காடா துணிகள் நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும் எனவும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர் .. மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் புகார் பெட்டி வைக்கப்பட்டு 100 நாட்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக அறிவித்தனர் ஆனால் பொது மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை .. மேலும் வார்டுகளில் உள்ள புகார் பெட்டிகளில் உள்ள மனுக்களை எடுத்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் .

Tags

Next Story