பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் திறப்பு விழா

பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் திறப்பு விழா

திறப்பு விழா 

திருக்கோவிலூர் அருகே பழனியப்பா ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் தயாரிப்பு நிறுவன தொழிற்சாலை திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த சு.கொல்லுார் குருஜி ஆசிரமம் பின்புறம் உள்ள பழனியப்பா ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் புதிதாக பிரிக்ஸ் மற்றும் சாலிட் பிளாக் தயாரிப்பு நிறுவன தொழிற்சாலையை துவக்கினர்.இதன் திறப்பு விழாவிற்கு, பழனியப்பா குழுமத் தலைவர் பழனிசாமி, நிறுவனத் தலைவர் வாஞ்சிநாதன், ஹோண்டா குழுமத் தலைவர் முத்தமிழன் வரவேற்றனர். அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பிரிக்ஸ் மற்றும் சாலிட் தயாரிப்பு நிறுவன பணிமனையை திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், அமைப்புச் செயலாளர் மோகன், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, சர்க்கரை ஆணைய தலைவர் ராஜசேகர், தொழிலதிபர்கள் ஓம்சக்தி சேகர், முரளி, சக்தி, ஆரணி கஜேந்திரன், சின்னதுரை, ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story