திருமணமான 6 மாதத்தில் மணப்பெண் தற்கொலை
தற்கொலை செய்து கொண்டவர்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மகள் நிலபர் வயது 22. இவருக்கும் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் அறிவுரை கூறிவந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் நிலைய போலீசார் இறந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் ஆகி ஆறு மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணத்தில் திண்டுக்கல் ஆர்டிஓ நேரில் சென்று விசாரணை நடத்தினார்.