கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகள் - வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகள் - வாகன ஓட்டிகள் அவதி

சாக்கோட்டை அருகே கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.


சாக்கோட்டை அருகே கிடப்பில் போடப்பட்ட பாலப்பணிகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சி, காரைக்குடி மாநகருக்கு அருகில் உள்ள ஆன்மிக தலமுள்ள ஊராட்சி ஆகும். இப்பகுதியில் புதிதாக அதிகளவில் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். நகருக்கு இணையாக வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் படிப்படியாக ரோடு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, கோட்டைக்கரை கோயிலில் இருந்து தெற்கு குடியிருப்பு ரோட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.51 கோடியில் புதிய ரோடு போடும் பணிக்கு நிதி ஒதுக்கினர். இந்நிதியில் 2.5 கி.மீ., துாரத்திற்கு ரோடு போடும் பணி துவங்கியது. இதற்கிடையில் இரண்டு இடங்களில் பாலம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு குடியிருப்பு அருகே பாலம் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் புதிய ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

Tags

Next Story