சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி குறித்து பிருந்தா தேவி அறிவுரை !!

சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி குறித்து பிருந்தா தேவி அறிவுரை !!

பிருந்தா தேவி 

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு எண்ணும் பணி வருகிற 4-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணப்படும். வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் குலுக்கள் முறையில் தலா 5 விவிபேட் தேர்வு செய்யப்படும். அதன் மூலம் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியில் உள்ள சிலிப்கள் எண்ணும் பணி தொடங்கப்படும். குறைந்தபட்சம் 17 சுற்றுகள் முதல் அதிகபட்சம் 25 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள முகவர்கள் மட்டும் மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் பணியில் 1500 பேர் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணும் பணிகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு வேட்பாளர்கள், முகவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story