கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் விளையும் வெள்ளைக் கத்தரிக்காய்க்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தனி மவுசு உண்டு. ஆலங்குளம் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் கத்தரிக்காய் மூட்டைக்கு விலை நிா்ணயம் செய்த பின்னரே மற்ற காய்கனிகளின் விலை நிலவரம் முடிவு செய்யப்படும். இந்நிலையில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் பொங்கல் பண்டிகை வரை கத்தரிக்காய் கிலோ ஒன்றிற்கு விலை ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனையானது.
அதைத் தொடா்ந்து படிப்படியாக குறையத் தொடங்கிய கத்தரிக்காய் விலை, கடந்த வாரம் வரை கிலோ ஒன்றிற்கு ரூ. 40-50 என விற்பனையானது. இந்நிலையில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்த காரணத்தால் ஆலங்குளம் சந்தைக்கு வரும் கத்தரிக்காய் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் 40 கிலோ கொண்ட சிறிய மூட்டை ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் கடந்த 3 தினங்களாக ரூ. 300 - 400 ஆக வீழ்ச்சியடைந்தது. இதனால் இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். தற்போது கத்தரி விளைச்சல் கண்டுள்ள விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம்தான் என்றாா் அவா்.