ஆசிரியை வீட்டு கதவை உடைத்து 16 பவுன் நகை, பணம் கொள்ளை

X
திருட்டு நடந்த வீடு
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாலக்கல்பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (42) கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜினி கேரளாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பிள்ளைகள் கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரும் பாட்டி வீட்டில் தங்கி உள்ளனர். ஜினியை வழக்கம் போல நேற்று ஜெபராஜ் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலை 5 மணி அளவில் ஜெபராஜ் மனைவியுடன் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பு உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் உள்ள பீரோவை திறந்து, உள்ளே இருந்த 16பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெபராஜ் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags
Next Story
