ஆலங்காயம் அருகே கதவை உடைத்து, 80 சவரன் தங்க நகை கொள்ளை
கொள்ளையடிக்கப்பட்ட வீடு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், இவரது மனைவி பத்மாவதி இவர்களுக்கு, மகள் கனிமொழி,வயது 19 மகன் சந்தோஷ் வயது16 என இரு பிள்ளைகள் உள்ளனர் மகள் கனிமொழி 12 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற் படிப்புக்காக கல்லூரியில் சேர்க்க நாமக்கல் பகுதிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய உள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கதவை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.4.லட்சம் ஆயிரம் பணம் மற்றும் 80 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்த ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களைக் கொண்டு கைரேகை பதிந்து விசாரணை நடத்தி, வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது