கடையின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை..

கடையின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை..

கொள்ளை

சேலத்தில் கடையின் பூட்டை உடைத்து10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்த மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு.

சேலத்தில் கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெள்ளி பொருட்கள் விற்பனை சேலம் கொண்டலாம்பட்டி அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் சேலம் கருங்கல்பட்டி பகுதியில் வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றார். ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் விடுமுறை விட்டிருந்தார். நேற்று கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அருகில் உள்ளவர்கள் அங்கமுத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் கடைக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கொலுசு உள்ளிட்ட 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. மேலும் மர்ம ஆசாமிகள் அங்கிருந்த பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பதும் தெரிய வந்தது. தேடி வருகின்றனர் பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த கடைக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையில் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story