நாகர்கோவில் அசம்பு ரோட்டில் உடைந்து கிடக்கும் சாக்கடை மூடிகள் - பொதுமக்கள் அவதி 

நாகர்கோவில் அசம்பு ரோட்டில் உடைந்து கிடக்கும் சாக்கடை மூடிகள் - பொதுமக்கள் அவதி 

 உடைந்து கிடக்கும் சாக்கடை மூடிகள்

போர்க்கால அடிப்படையில் உடைந்து கிடக்கும் சாக்கடை மூடிகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெட்டையில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து புதிதாக பாலம் அமைக்கப்படுகிறது.இதனால் ஒழுகினசேரி வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை செல்லும் பஸ்கள் அனைத்தும் வடசேரியில் இருந்து அசம்பு ரோடு, புத்தேரி வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை மாலை நேரங்களில் அசம்பு ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த ரோடு மிக குறுகியதாக உள்ளதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெருக்கடியால், வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் உள்ள சாக்கடை ஓடை முடிகளில் மேல் வாகனங்களை ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் ஓடையின் மேல் மூடப்பட்டுள்ள மூடிகள் உடைந்து காணப்படுகின்றன. இதில் பஸ்களும் சிக்கி தவித்த சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபாதையில் போடப்பட்டுள்ள மூடிகள் பல இடங்களில் உடைந்து மிக மோசமாக காட்சி அளிக்கிறது.இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் அந்த மூடிகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story