குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீர் - பயணியர் அவதி !
குழாய் உடைப்பு
போரூரில் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வெளியேறுவதை தடுத்த நிலையில் குழாய் உடைப்பை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, போரூர் ஏரிக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் செல்லும் குழாய் உடைந்து, போரூர் சந்திப்பில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சென்னை, நெசப்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், போரூர் ஏரியில் விடப்படுகிறது. இந்நிலையில், போரூர் மேம்பாலம் அருகே, நேற்று காலை இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால், போரூர் ஆற்காடு சாலை சந்திப்பில் குளம் போல் தண்ணீர் தேங்கி, பயணியர் பேருந்தில் ஏற முடியாமல் தவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல மணி நேரம் கழித்தே குடிநீர் வாரிய ஊழியர்கள் வந்து, தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய பணியால் குழாய் சேதமடைந்துள்ளது. இரவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story