கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலம்

 கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழக பெண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்றது; அணியில் இடம்பெற்ற சேலம் மாணவி கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழக பெண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்றது; அணியில் இடம்பெற்ற சேலம் மாணவி கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இந்த அணியில் சேலம் மாணவி கார்த்திகா இடம் பெற்று இருந்தார். அவருக்கு சேலத்தில் நடந்த பாராட்டு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு மாணவி கார்த்திகாவை பாராட்டினார். இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், இணை செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story