சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது

பேரணாம்பட்டு அருகே சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே செர்லபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (44), இவரது தம்பி யுவராஜ் (41). இருவருக்கும் வீடு பாகப்பிரிவினை செய்து கொள்வதில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் இருவரும் அடிக்கடி புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் மாமியார் வீட்டில் வசித்து வந்த யுவராஜ், தனது அண்ணன் ஜோதியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு அவரை தடியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் அவர்களின் தாயார் மனோன்மணி புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜோதி தாக்கியதாக யுவராஜ் கொடுத்த புகாரின்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story