தங்கையை காதல் திருமணம் செய்த நபருக்கு இரண்டு ஆண்டு கழித்து அடி உதை

தங்கையை காதல் திருமணம் செய்த நபருக்கு இரண்டு ஆண்டு கழித்து அடி உதை

தங்கை கணவர் மீது தாக்குதல் 

மயிலாடுதுறை அருகே தத்தங்குடி பகுதியில் தங்கையை திருமணம் செய்தவர் மீது தாக்குதல் நடத்திய சகோதரர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள மங்கை நல்லூர் தத்தங்குடி புளியந்தோப்பு தெருவை செர்ந்தவர் கஜேந்திரன் மகன் முகேஷ் (21) இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவரது சகோதரி வினோதினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் முக்கேசுக்கும் விக்கிக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று காலை வினோதினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் அவரை முகேஷ் பைக்கில் அழைத்து கொண்டு சென்ற போது தத்தங்குடி பகுதியில் நின்று கொண்டிருந்த வினோதினியின் சகோதரர் விக்கி மற்றும் ராஜா சரவணன் சதாசிவம் ஆகியோர் கேலியாக பேசி முகேஷிடம் வம்பு வளர்த்துள்ளனர்.

இறுதியில் முக்கேஷை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். அடிபட்ட முகேஷ் அளித்த புகாரின் பேரில். பெரம்பூர் போலீசார் நான்கு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story