சொத்து தகராறில் தம்பி கொலை - அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் தம்பி கொலை - அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

பாஸ்கர் 

பாபநாசம் அருகே சொத்து தகராறில் தம்பியை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ்,45,. கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி காத்திகா, மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் அவரது அண்ணன் பாஸ்கர் இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்தனர். பாஸ்கர்,62,. தனது குடும்பத்தை கவனிக்காமல் பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தார். இந்நிலையில், ரமேஷ் தனது அண்ணன் குடும்பத்திற்கும் உதவிகளை செய்து வந்தார்.

இதனால் ரமேஷ் தந்தை அவருக்கு வந்த பென்சன் பணம், விவசாய நிலத்தில் வரும் வருமானத்தை பாஸ்கரிடம் கொடுக்காமல் இருந்து வந்தார். இது தொடர்பாக பாஸ்கர் பலமுறை ரமேஷிடம் பணத்தையும், சொத்தையும் கேட்டு தகராறு செய்து வந்துள்ளளார். இந்நிலையில், கடந்த 2022ம் டிச.23ம் தேதி ரமேஷ் வயலில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது, அங்கு சென்ற பாஸ்கர் சொத்து கேட்டு ரமேஷிடம் தகராறு செய்து, கையில் வைத்திருந்த கடப்பாரையால் அடித்துள்ளார். இதில் ரமேஷ் சம்பவ இறந்து போனார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கபிஸ்தலம் போலீசார் பாஸ்கரை கைது செய்தனர். இவ்வழக்கு கும்பகோணம் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கை நீதிபதி ராதிகா நேற்று விசாரித்து, பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் அரசு வக்கீல் விஜயக்குமார் ஆஜராகினார்.

Tags

Next Story