அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து : 2பேர் கைது

அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து : 2பேர் கைது

கைது 

தூத்துக்குடியில் முன்விரோதத்தால்  இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அண்ணன்-தம்பியை கத்திக்குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் முகேஷ் (20), இவருக்கும் முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் கௌதம் (25) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முகேஷ் தனது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து கௌதத்தை கத்தியால் குத்தினார்களாம். இதை தடுக்க வந்த அவரது தம்பி சஞ்சய் (17) என்பவருக்கும் குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பழனி முருகன் மகன் சக்தி குமார் (21), அம்பேத்கர் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் பாலு விக்னேஷ் (20) ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.

மேலும் முகேஷ் உட்பட 3 பேரை தேடி வருகிறார்கள். இதனிடையே தனது மகன்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்து கிருஷ்ணராஜபுரத்தில் முகேஷை தேடிச் சென்றுள்ளார். அங்கு அவரது தந்தை பெரியசாமியின் டீகடைக்கு சென்று டீ மாஸ்டரான சமீர்வியாஸ் நகரை சேர்ந்த தங்கசாமி மகன் சுரேஷ் குமார் (52) என்பவரை அடித்து உதைத்து அங்கு உள்ள கண்ணாடிகளை சேதப்படுத்தினாராம். இதில் காயம் அடைந்த சுரேஷ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார். இதனிடையே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags

Next Story