வாலிபரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 2 பேர் மீது வழக்கு

வாலிபரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 2 பேர் மீது வழக்கு

வழக்கு பதிவு 

இரணியல் அருகே வாலிபரை வழிமறித்து கொடூர தாக்குதல் செய்த 2 பேர் மீது வழக்கு.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மயிலோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் மனைவி மேரிவசந்தா. இவர்களது மகன் ஜெரின் (29) அந்த பகுதியில் உள்ள வெல்டிங் ஷாப்பில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி மாலை அதே பகுதியை சேர்ந்த ஜெபின் ஜேக்கப் (25) என்பவர் ஜெரினை செல்போனில் அழைத்து, கார் ஷெட் போட வேண்டும் எனவே எங்கள் வீட்டிற்கு வருமாறு கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய ஜெரின் ஆலங்கோடு பகுதியை சென்றுள்ளார். அப்போது அவரை ஜெபின் மற்றும் பிராங்கிளின் இரண்டு பேரும் தடுத்து நிறுத்தி, ஏற்கனவே உள்ள முன் விரோதம் காரணமாக ஜெரினை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஜெரின் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே கொலை மிரட்டல் விடுத்த ரெண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர் தாயார் மேரி வசந்தா மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவல் குறித்து இரணியல் போலீசாரிடம் புகார் அளித்தும் வழக்குப் பதியாமல் இழுத்தடிப்பு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஜெரினின் முதுகு தண்டுவடத்தில் இரண்டு எலும்புகள் உடைந்து உள்ளதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து மேரி வசந்தா மாவட்ட எஸ் பி -டம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் ஜெபின் ஜேக்கப், பிராங்கிளின் ஆகிய இரண்டு பேர் மீதும் 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story