கான்கிரீட் கால்வாய் அமைக்க புத்தேரியினர் வலியுறுத்தல்

கான்கிரீட் கால்வாய் அமைக்க புத்தேரியினர் வலியுறுத்தல்

கழிவுநீர் கால்வாய் 

மண் கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பிரதான சாலையோரம் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் இக்கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்துள்ளதால்,

கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரிக்கும் நிலை இருப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மண் கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தேரி கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story