காட்டெருமை சுடப்பட்ட விவகாரம். விரைவில் கைது நடவடிக்கை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி அணைப்பகுதிகள் கடந்த இரு தினங்ளுக்கு முன்பு 4 - வயது மதிக்கதக்க ஆண் காட்டெருமை ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. காட்டெருமை உடலில் இருந்து எடுக்கப்பட்ட உலோகம் போன்ற துப்பாக்கி குண்டை வைத்து காட்டேரி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் யார் யார் துப்பாக்கி வைத்துள்ளனர் என்றும் அவர்கள் துப்பாக்கிக்கு உண்டான குண்டை வைத்திருக்கிறார்களா?எனவும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காட்டெருமை சுடப்பட்ட நபரை விரைவில் கைது செய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story