உதகை அருகே காட்டெருமை சுடப்பட்ட விவகாரம்: 3பேர் கைது

உதகை அருகே காட்டெருமை சுடப்பட்ட விவகாரம்: 3பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

உதகை அருகே கேத்தி பகுதியில் காட்டெருமை சுடப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை கைது வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள காட்டேரி அணைப்பகுதியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி 4 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை இறந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் காட்டெருமையை ஆய்வு செய்தபோது தலையில் பகுதியில் துப்பாகியால் சுடப்பட்டு இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

காட்டெருமை சுடப்பட்டு இறந்திருப்பதை கண்டுபிடிக்க மாவட்ட வன அலுவலர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து தீவிரமாக குன்னூர், உதகை, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் காட்டெருமை சுடப்பட்ட விவகாரத்தில் கூடலூரைச் சேர்ந்த ஷிபு, சதீஷ்,சுரேஷ் உள்ளிட்ட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story