கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
பைல் படம்
ஆரணி அருகே தாய் கண்டித்ததால் கட்டிட மேஸ்திரியான மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், மனைவி காசி அம்மாள். இவர்களுடைய மகன் வினோத் (வயது 23), கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் காசி அம்மாள் வினோத்தை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வினோத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story