பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் கட்டிட திறப்பு விழா

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் கட்டிட திறப்பு விழா

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் கட்டிட திறப்பு விழா


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், அம்மாபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் சார்பில் புதிதாக 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கை ரூ.293 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் குத்து விளக்கை ஏற்றி வைத்து கட்டடத்தை பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், அம்மாபாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் சார்பில் புதிதாக 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கை ரூ.293 இலட்சம் மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் குத்து விளக்கை ஏற்றி வைத்து கட்டடத்தை பார்வையிட்டு பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் (ம) மீனவர் நலத்துறை மற்றும் பால் வளத்துறையின் மூலம் புதிய பால் பவுடர் சேமிப்பு கிடங்கு அறிவிக்கப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக ரூ.293 இலட்சத்தில் பால் பவுடர் சேமிப்பு கிடங்கினை இன்றைய தினம் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்கள். அம்மாபாளையம் ஊராட்சியில் தற்பொழுது பால் பவுடர் சேமிப்பு கிடங்கில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பவுடர் ஆலையை கொண்டு இயங்கி வருகின்றது.

உற்பத்தி செய்யப்படும் பால் பவுடரை கூடுதலாக 1500 மெட்ரிக் டன் இருப்பு வைக்க புதிதாக சேமிப்பு கிடங்கு தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கானது பணி ஆரம்பிக்கப்பட்ட நாள் 09.02.2023 லிருந்து 6 மாதத்திற்க்குள் பணிகள் நிறைவுப்பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் பால் பவுடர் சேமிப்பு கிடங்கு மூலம் தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை அம்மாபாளையம் ஊராட்சிக்கு அனுப்பும் பாலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பால் பவுடர் போதிய இடவசதியுடன் தற்பொழுது சேமிக்கப்படும்.

இந்த கிடங்கு 18,400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இன்றைய சமுதாயத்தில் மாணவச் செல்வங்கள் அதிக அளவில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் படிக்க கவனம் செலுத்துகிறார்கள். பால் டெக்னால்ஜி படிக்கும் படிப்பிற்கு யாரும் முன் வருவதில்லை ஆனால் மற்ற துறைகளை விட பால் டெக்னால்ஜி படித்தால் வேலை வாய்ப்பு அதிகம். தர்மபுரியில் காலை 10 லிட்டர். மாலை 10 லிட்டர் தரும் புது வகை மாடு உள்ளன. இம்மாவட்டத்தில் இன்னும் அதுபோன்ற மாடுகள் வரவில்லை. அந்த வகை மாடுகளை இம்மாவட்டத்திற்கு கொண்டுவர கால்நடைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இம்மாவட்டத்திற்கும் விவசாயிகளுக்கும் நல்ல இலாபம் கிடைக்கும்.

இம்மாவட்டத்தில் பால் ஒன்றுதான் பிரதான தொழிலாக விவசாயிகளுக்கு உள்ளன. அதேபோல் உலக நாடுகளிலே இந்தியா பால் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில்உள்ளது. எனவே, நமது மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிறைய பால் உற்பத்தி மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கியில் எல்லாம் விவசாயிகளுக்கு கறவை பசு வங்கி கடன்கள் தர வேண்டும்.அந்த கடனை விவசாயிகள் பெற விவசாயிகள் முறையான வங்கி கணக்குகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்),பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), துணை பொது மேலாளர் ஆவின் உ.மணி , புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் .சுந்தரபாண்டியன், செயலர்(கட்டுமானம்) ஆவின் சு.ஸ்ரீதரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story