விற்பனைக்கு குவிந்த பருத்தி மூட்டைகள்

நாமக்கலில் விற்பனைக்கு குவிந்த பருத்தி மூட்டைகளை தரம் பார்க்கும் வியாபாரிகள்.
நாமக்கல்லில் விற்பனைக்கு குவிந்த பருத்தி மூட்டைகள் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பருத்தி இன்றைய ஏலத்திற்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். அவற்றை பருத்தி வியாபாரிகள் தரம் பார்த்து பார்வையிட்டனர்.

Tags

Next Story