எருது விடும் விழாவில் காளை புறக்கணிப்பு: மாட்டை கட்டி ஆர்ப்பாட்டம்

எருது விடும் விழாவில் காளை புறக்கணிப்பு:  மாட்டை கட்டி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருப்பத்தூர் எருது விடும் விழாவில் காளை புறக்கணிக்கப்பட்டதால், கலெக்டர் அலுவலக கேட்டில் மாட்டை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை கிராமத்தில் எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் திருப்பத்துார், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டது.

அப்போது, திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், தனது காளை அழைத்து வந்திருந்தார். ஆனால் விழா குழுவினர் அவரது காளையை களத்தில் விடாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து மாலை திருப்பத்துார் கலெக்டர் அலுவலக கேட்டில் இரு காளைகளை கட்டி வைத்து நுாதனமுறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வத்த திருப்பத்துார் டவுன் போலீசார் விரைந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடந்தினர். அப்போது அவர் கூறுகையில், வெள்ளைகுட்டை கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு எனது காளை அழைத்துச் செல்லப்பட்டது.விழா குழுவிடம் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டேன் எனக்கு மூன்றாவது டோக்கன் கிடைத்தது.

பின்னர் களத்தில் விட காளைகளை வரிசையில் நிறுத்தப்பட்டது.அப்போது விழா குழுவினர் பக்கத்து கிராம காளைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கினர். இதனால் எனது காளை புறக்கணித்துவிட்டனர் என்றார் இதை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை தொடர்ந்து காளையை அழைத்து சென்றார். சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

Tags

Next Story