கலவை அருகே எருதுகாட்டு விழா - சீறிப் பாய்ந்த காளைகள்

கலவை அருகே எருதுகாட்டு விழா - சீறிப் பாய்ந்த காளைகள்

எருது காட்டு 

கலவை அருகே உள்ள வெள்ளம்பி பெருமாள் உற்சவ திருவிழாவை முன்னிட்டு எருது காட்டும் போட்டி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வெள்ளம்பி கிராமத்தில் இன்று ஸ்ரீ பெருமாள் உற்சவ திருவிழாவை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் எருது காட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழா தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஊர் நன்மைக்காகவும் பொதுமக்கள், கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் விவசாயம் செழிக்கவும் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மாலை நடைபெற்ற எருதுகாட்டும் விழாவில் இளைஞர்கள் தங்களது வீரத்தை காட்டும் விதமாக மாட்டின் முன்பு எருது காட்டினர். அப்போது இளைஞர்களுக்கு மாடு முட்டியதில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. முன்னதாக ஸ்ரீ பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெருமாள் மற்றும் புளியாத்தம்மன் சாமி ஊர்வலம் இரவு நடைபெற்றது. அப்பொழுது அவரவர்கள் வீட்டின் முன்பு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் ராதா சக்கரவர்த்தி, இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story