அக்குமாரியம்மன் கோயில் விழாவில் எருதாட்டம்

பாலக்கோடு அருகே அக்குமாரியம்மன் கோயில் விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற எருதாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்கு மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கிவெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான நேற்று மாலை எருதாட்டம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புறத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேள தாளங்களு டன் குல வழக்கப்படி கோ பூஜைசெய்து காளைகளின் மேல் புனித நீர் தெளித்தும் எருதாட்டம் தொடங்கியது. இந்த விழாவிற்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார் .தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோயிலை சுற்றி வலம் வந்தன. இதையடுத்து, ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விட்டனர். 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. எருதாட்டத்தை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர். பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story