கடியாபட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப்போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர்,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 19 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும் கரிச்சான் மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு போகவர 9 மைல் தூரமும் சிறிய மாட்டிற்கு மாடு போகவர 6 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது.
இறுதியில் வெற்றி பெற்ற பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம்,வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை காண சாலையில் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் சாலையில் துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி ஜோடிகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.