பொம்மதேவன் கோவிலில் எருது விடும் விழா - ஏராளமான கிராம மக்கள் பங்கேற்பு

தம்பநாயக்கன்பட்டியில் பொம்மதேவன் கோவிலில் எருது விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் தம்பநாயக்கன்பட்டியில் பொம்மதேவன் கோவிலில் எருது விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் விழாவை தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மாட்டுப் பொங்கல் முடிந்தவுடன் காணும் பொங்கல் திருநாளில், பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. மாடுகளை வளர்க்கும் ஒவ்வொரு கிராமத்தினரும், மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாலை அணிவித்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தாந்தோனி ஒன்றியத்தில் உள்ள தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மதேவன் ஆலயத்திற்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் வளர்த்து வந்த எருதுகளை அழைத்து வந்து எருது விடும் விழாவில் பங்கேற்றனர். ஒரே இடத்தில் பல்வேறு வண்ணங்களில் அழைத்துவரப்பட்ட எருதுகள் காண்போரை பரவசமடைய செய்தது.

Tags

Next Story