ராமநாதபுரத்தில் சிரிப்பாய்ந்த காளைகள்

ராமநாதபுரம் செவல்பட்டி அருள்மிகு கருப்பசாமி கோவில் வருடாந்திர பொங்கல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

ராமநாதபுரம் சாயல்குடி அருகே செவல்பட்டி கிராமத்தில் அருள்மிகு கருப்பசாமி கோவில் வருடாந்திர பொங்கல் விழாவை முன்னிட்டு பூஞ்சிட்டு நடுமாடு சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இதில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை, விருதுநகர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்

முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது இந்த மாட்டு வண்டி பந்தயத்தை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்

Tags

Read MoreRead Less
Next Story