எடப்பாடி அருகே எருதாட்டம் - 3 பேர் காயம்

எடப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில் நடந்த எருதாட்டத்தில் பெண் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொங்கணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 18 பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான வேம்பனேரி ஸ்ரீ அய்யனாரப்பன் கோவிலில் ஆண்டுதோறும் (காணும் பொங்கல்) உழவர் திருநாளன்று மஞ்சுவிரட்டு என்றழைக்கப்படும் எருதாட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்.அதனடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகளும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற இந்நிகழ்வினை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.

அப்போது மஞ்சுவிரட்டு நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேம்பனேரியைச் சேர்ந்த சீரங்கம்மாள் (50), மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நந்தகுமார்(18) ஆகிய இரண்டு பேரும் படுகாயமடைந்த நிலையில் எடப்பாடியிலுள்ள அத்விகா தனியார் மருத்துவமனையிலும், வேம்பனேரியைச் சேர்ந்த சின்னமுத்து(75) எடப்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஞ்சுவிரட்டு நிகழ்வில் மாடு முட்டி மூன்று பேர் படுகாயம் அடைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

Tags

Next Story