பெரிய புத்தூரில் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம்

பெரிய புத்தூரில்  கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம்

பெரிய புத்தூரில் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடந்தது.


பெரிய புத்தூரில் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடந்தது.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரில் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இதையொட்டி பெரியபுத்தூரை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 10 குழுக்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று எருதுகளை பூஜை செய்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஊரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள வெண்ணங்குடி முனியப்பனுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அங்கிருந்து மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மைதானத்தில் முதலில் கோவில் காளைக்கு எருதாட்டம் நடத்தப்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் சீறிபாய்ந்து சென்றன. இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். எருதுகளுக்கு வடம் கயிறு கட்டி இருபுறமும் வீரர்கள் பொம்மையை வைத்து ஆட்டினர். முன்னதாக எருதுகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

விழாவையொட்டி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எருதுகள் கூட்டத்திற்குள் புகாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரும் தாயார் நிலையில் இருந்தனர். எருதாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா மற்றும் ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story