பெருங்காட்டில் மாட்டு வண்டி பந்தயம்

பெருங்காட்டில் மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்காடு பகுதியில் சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தில் முக்கண் ஈஸ்வரர் கோயில் சந்தன காப்பு விழாவை முன்னிட்டு ஊர் இளைஞர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, நடமாடு, கரைச்சான்மாடு என்று மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெருங்காடு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story