மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

மாட்டு வண்டி பந்தயம்

விளாத்திகுளம் அருகே விருசம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், ஸ்ரீ மாடசாமி திருக்கோவிலின் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம்,மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர்,தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சிறிய மாடுகளுக்கு 12 கிலோமீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 8 கிலோமீட்டர் தூரமும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் இம்மானுவேல் உள்ளிட்டோர் பரிசுத்தொகையை வழங்கி கௌரவித்தனர்.

Tags

Next Story