முன்னாள் எம்எல்ஏ பாராட்டு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

முன்னாள் எம்எல்ஏ பாராட்டு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கையில் முன்னாள் எம்எல்ஏவின் பாராட்டு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.


சிவகங்கையில் முன்னாள் எம்எல்ஏவின் பாராட்டு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கையில் மக்கள் சேவையில் 70 ஆண்டு கால பொதுவாழ்வு வாழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரனுக்கு பாராட்டு விழா நடைபெறுவதை ஒட்டி நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 22 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை - தொண்டி சாலையில்‌ நடைபெற்ற இப்பந்தயத்தில் சிவகங்கை, மதுரை புதுக்கோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 22 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டு வண்டி, என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாட்டிற்கு 10 கிலோமீட்டர் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 கி.மீ. தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றது. இருபிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும், சாரதிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கியதோடு கேடயமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story