காளையார்கோவிலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

காளையார்கோவிலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

காளையார்கோவிலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.


காளையார்கோவிலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கையை மாவட்டம் , காளையார்கோவிலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாட்டில் 19 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டில் 18 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. சிவகங்கை - தொண்டிச் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 37 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8 மயில் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மயில் தூரமும் போட்டிக்கான எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை சிவகங்கை, கொல்லங்குடி, அழகாபுரி, காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

Tags

Next Story