குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலை

குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலை

பவுஞ்சூர் அருகே அணைக்கட்டு கிராமத்தில் குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதாக புகார் எழுந்துள்ளது.


பவுஞ்சூர் அருகே அணைக்கட்டு கிராமத்தில் குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அருகே அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, பச்சம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் 4 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது. இது, நரியூர், தாதங்குப்பம், பவுஞ்சூர், பச்சம்பாக்கம், கல்குளம் ஆகிய கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, சாலை முழுதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாய் சேதமடைந்து காணப்படுகிறது.

அதனால், தினசரி இந்த சாலையில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளத்தால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வோர், சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லியால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story