பங்க் ஊழியர் வெட்டி கொலை - உறவினர்கள் தொடர் போராட்டம்

பங்க் ஊழியர் வெட்டி கொலை - உறவினர்கள் தொடர் போராட்டம்

முத்துபெருமாள்

ரெட்டியார்பட்டி மலை அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி மலை அருகே கடந்த 31ஆம் தேதி பெட்ரோல் பங்க் ஊழியர் முத்துபெருமாள் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வெட்டப்பட்ட முத்து பெருமாளின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று நான்காவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் முத்து பெருமாள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story