அரசு அலுவலா் வீட்டில் திருட்டு: 2பேர் நீதிமன்றத்தில் சரண்

அரசு அலுவலா் வீட்டில்  திருட்டு: 2பேர் நீதிமன்றத்தில் சரண்

கோப்பு படம் 

கோவில்பட்டியில் வட்டார வளா்ச்சி அலுவலா் வீட்டில் ரூ.48 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 2 இளைஞா்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பாண்டவா்மங்கலம் ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் சிங்கராஜ். இவா், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலராக உள்ளாா். குடும்பத்தினா் ஏற்கெனவே வெளியூா் சென்றிருந்த நிலையில் இவா், கடந்த 8ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினாா். அ

ப்போது, மா்ம நபா்கள் கதவை உடைத்து வீடு புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.48 லட்சத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிவகங்கை மாவட்டம் வேளாண்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சூா்யா (25), சிறுகுடி வேலூா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் வேல்முருகன் (21) ஆகிய இருவரும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 2இல் நேற்று சரணடைந்தனா். நீதிமன்ற நடுவா் பீட்டா் வழக்கை விசாரித்து, இருவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story