வீட்டில் திருட்டு - பணிப்பெண் மீது போலீசில் புகார்

X
காவல் நிலையம்
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீ (வயது 45). இவர் பள்ளப்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருட்டு போனது. வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நகையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
