சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

பைல் படம்

கன்னங்குறிச்சியை சேர்ந்த கமல், வெளியூர் சென்று வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகையை மர்மநபர்கள் திடுடிய நிலையில் போலீஸ் விசாரணை நடக்கிறது.
சேலம் கன்னங்குறிச்சி சாய்பாபா கோயில் அருகே வசித்து வருபவர் கமல் (38). இவர் கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் சென்று விட்டு மறுநாள் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருடுபோய் இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி அவர் கன்னங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story