திருட்டு சம்பவம்: சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய மக்கள்

திருட்டு சம்பவங்களை தடுக்க தங்களது சொந்த செலவில் மக்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தினர்.
வேலூர் மாநகர் தொரப்பாடி கணபதி நகரில் திருட்டு சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்க அப்பகுதி மக்களே ஒன்றி சேர்ந்து சிசிடிவி கேமிராக்களை பொருத்தி அசத்தியுள்ளனர். தொரப்பாடி கணபதி நகரில் 150-கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வரும் நிலையில், சமீப காலமாக வேலூர் மாநகரின் நகரின் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் கொலை, அடிதடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், கணபதி நகரில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் விதமாக, 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் 9தெருக்களில் அதிநவீன 20 சிசிடிவி கேமராக்களை பொருத்தி அதனை இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். கணபதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நடத்தப்பட்ட சிசிடிவி திறப்பு விழாவில் வேலூர் மாநகராட்சி பொருப்பு ஆணையர் சசிகலா, 49 வார்டு கவுன்சிலர் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story