ராமநாதபுரம் அருகே அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

ராமநாதபுரம் அருகே  அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அரசு மரியாதை செய்த போலீசார் 

ராமநாதபுரம் ஆர்.எஸ்..மங்கலம் அருகே உடல் உறுப்புதானம் செய்யப்பட்ட முருகன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லமடை ஊராட்சி செங்கமடை கிராமத்தைச்சேர்ந்த முனியாண்டி மகன் முருகன், இவரின் உறவினர் ராதாகிருஷ்ணன் இருவரும் கடந்த 22-ந் தேதி ராமநாதபுரத்திற்கு உறவினர் இறப்பிற்கு சென்று திரும்பும் பொழுது இரவில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சோழந்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் முதல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகன் சிகிச்சை பலனளிக்காமல் மூளை சாவு அடைந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து முருகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். அதன் அடிப்படையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முருகனின் உடல் அவரது சொந்த ஊரான செங்கமடைக்கு நேற்று( 27.01.24) கொண்டுவரப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முருகன் வீட்டிற்கு சென்று உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

அதனை தொடர்ந்து அவரது உடல் இறுதிச் சடங்குகள் செய்ய எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போலீசார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தீ மூட்டப்பட்டது இறந்த முருகனுக்கு கனகாம்பாள் என்ற மனைவியும் நந்தினி.நதியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிகழ்வில் ஆர் எஸ் மங்கலம் தாசில்தார் சுவாமிநாதன்,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மருத்துவ குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் பாஸ்கரன் இறுதி மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story