நாகூர் கந்தூரி விழாவில் பர்மாவின் சிறப்பு பூரான் கொடி ஏற்றம்
பூரான் கொடி ஏற்றம்
உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவரின் 467வது கந்தூரி விழாவில் நேற்று மாலை பர்மாவிலிருந்து சிறப்பு பூரான் கொடி எடுத்து வரப்பட்டு பெரிய மினோராவில் ஏற்றப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவரின் 467வது கந்தூரி விழா , கடந்த 14ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது ஒன்பதாம் நாளான நேற்று மாலை பர்மாவிலிருந்து சிறப்பு பூரான் கொடி எடுத்து வரப்பட்டு பெரிய மினோராவில் ஏற்றப்பட்டது. பர்மாவாழ் மக்களால் கையினால் எம்பிராய்டிங் செய்யப்பட்ட இந்த கொடி 50 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டதாகும். சிறப்பு விமான மூலம் எடுத்து வரப்பட்ட இந்த கொடியை நாகூர் ஆண்டவரின் பேரப்பிள்ளை சாகுல் ஹமீது ஃசூபி கலிபா சாஹிப் துவா ஓதி ஊர்வலமாக எடுத்துச் சென்று மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story