குஷ்புவின் உருவ பொம்மை எரிப்பு திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பரிப்பு

திரைப்பட நடிகை குஷ்புவின் உருவ பொம்மை எரிப்பு திமுக மகளிர் அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பரிப்பு
பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை குறித்து கொச்சைப்படுத்தி பிச்சை பெறுகிறார்கள் என மகளிர் ஆணைய குழு உறுப்பினரும் திரைப்பட நடிகையான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஷ்பூ விமர்சித்ததை கண்டித்து மாநில திமுக மகளிர் அணி வலைதளபொறுப்பாளர்ஒன்றிய குழு உறுப்பினர் திருநங்கை ரியா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குஷ்புவின்உருவ பொம்மையை எரித்து போராட்டம் நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் நாமக்கல் மேற்கு மாவட்டஇளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி | மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மல்லசமுத்திரம் ஜெகதீஸ் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லாவண்யா ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர்.அதற்குள் அங்கிருந்த பெண்கள் குஷ்புவின் உருவப்படத்தை விளக்கு மாற்றாலும் செருப்பாலும் அடித்து நெருப்பு வைத்து கொளுத்தி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம்பேசிய மாநில திமுகமகளிர் அணி வலைதள பொறுப்பாளர் ரியா கூறியதாவதுஇந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத வகையில் அனைத்து மாநிலத்துவரும் வியந்து பாராட்டும் வகையில் மகளிரின் மேம்பாட்டிற்காக மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி கடந்த நான்கு மாதங்களா க உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை கொச்சைப்படுத்தும் வகையிலும் பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பிச்சை காசு என கூறி அவதூறாக பேசிய திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியும் மகளிர் ஆணையக் குழு உறுப்பினருமான குஷ்பூவின்உருவப்படத்தைஏரிக்கும் போராட்டம் நடத்தியுள்ளோம் என கூறினார். திருச்சங்கோடு அண்ணா சிலை அருகே திரண்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர் முன்னதாக குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் விளக்குமாற்றாலும் அடித்தனர் திடீர் போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் வரைந்து வந்து குஷ்புவின் உருவ பொம்மை எரிக்க விடாமல் தடுத்தனர் இதனால் அண்ணா சிலை அருகே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story