பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து

பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து

பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு குளிர்சாதன வசதி கொண்ட அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த டிரைவர் விசு (வயது 41) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் அதிகாலை 3.30 மணியளவில் விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஊழியர் நகர் அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிகெட்டு ஓடி இடதுபக்க சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் விசு மற்றும் பயணிகளான புதுக்கோட்டையை சேர்ந்த சையத்பாரூக் (70), ராசு(32), ராஜி (51), ராஜா (38), திருச்சி சவுந்தர்யா (25), சென்னை மாதவரம் கீதா (22), மீனாட்சி (61), சென்னை ஊரப்பாக்கம் ரங்கநாதன் (65), திருப்பத்தூர் ரஞ்சித் (28) ஆகிய 11 பேர் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. அதன் பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story