வேலூரில் இருந்து புதிய வழித்தடத்தில் சென்னைக்கு பேருந்து
பேருந்து சேவை துவக்கம்
வேலூரில் இருந்து புதிய வழித்தடத்தில் சென்னை செல்லும் பேருந்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
வேலூரிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தட பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெகுமாரவேல் பாண்டியன் வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் த சுஜாதா ஆனந்தகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (விழுப்புரம்) பொது மேலாளர் கணபதி, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர் கவிதா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பேருந்து இயக்கப்படுவதின் மூலம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறினார். வேலூரில் இருந்து விரைவாக சென்னைக்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story