பைக் மீது பஸ் மோதி விபத்து - தந்தை பலி, மகன் காயம்

பைக் மீது பஸ் மோதி விபத்து - தந்தை பலி, மகன் காயம்
X

விபத்து

தென்காசி அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி நேரு தெருவைச் சேர்ந்தவர் ராமன் மகன் முருகன் (வயது 38). இவரும் இவரது மகன் மாணிக்கவாசகமும் நேற்று ராஜபாளையத்தில் இருந்து ராயகிரிக்கு பைக்கில் வந்தனர். பைக் சிவகிரி அருகே அம்பேத்கர் சிலை பகுதியில் சென்ற போது அவ்வழியே வந்த பஸ் திடீரென பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பின்னால் இருந்த முருகன் படுகாயமடைந்தார். மாணிக்கவாசகம் காயம் அடைந்தார். இருவரும் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பின்னர் முருகன் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்.

Tags

Next Story