டிரான்ஸ்பார்மரில் மோதிய பேருந்து - உயிர் தப்பிய தொழிலாளர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் , வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை பேருந்து ஓட்டுனர் வேதாச்சலம் என்பவர் இன்று அதிகாலை நாலு மணி அளவில் மேம்பாட்டத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு 20க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களை பணிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அய்யங்கார்குளம் அருகே வரும்போது ஓட்டுநர் வேதாச்சலத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக ஓட்டுநர் பேருந்தில் ஸ்டியரிங்கில் சாய்ந்துள்ளார்.
இதனால் பேருந்து சாலை ஓர ட்ரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் இடது பக்கம் கண்ணாடிகள் நொறுங்கி சத்தம் ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் அலறினர். பேருந்து இருந்து அவசரமாக வெளியேறிய நிலையில் சிலருக்கு கண்ணாடிகளால் கீரல்கள் காயம் ஏற்பட்டது.இந்த விபத்தில் டிரான்ஸ்பார்மர் முழுதும் சேதம் அடைந்து மின்தடை ஏற்பட்டதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக தொழிற்சாலை காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சுங்குவார்சத்திரம் பகுதியிலிருந்து செல்லும் நிலையில் இப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களுக்கு அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடைபெற வேண்டும் எனவும், ஓட்டுனரின் உடல்நலக் குறைவுக்கு தொடர் பணி காரணமா அல்லது அவரது உடல்நலன் காரணமா என்பதை தனியார் தொழிற்சாலை கண்டறிந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரையும் கோரிக்கையாக உள்ளது.அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.