புதிய வழித்தடத்தில் பேருந்து - துவக்கி வைத்த எம்எல்ஏ இளங்கோ

புதிய வழித்தடத்தில்  பேருந்து  - துவக்கி வைத்த எம்எல்ஏ இளங்கோ

புதிய வழித்தடத்தில் பேருந்து 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி மேற்கு ஒன்றியம், மொஞ்சனூர் ஊராட்சி, தொட்டம்பட்டியில் இருந்து பேரக்கம்பாளையம், கூனம்பட்டி, தென்னிலை, க.பரமத்தி வழியாக கரூர் சென்றடையும் வகையில், புதிய வழித்தடத்தில் நகர பேருந்தை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான கார்த்திக் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராம வழித்தடத்தில் பேருந்து இயக்குவதற்கு ஏற்பாடு செய்த எம்எல்ஏ இளங்கோவிற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story