திருப்பத்தூரில் பேருந்தால் பயணிகள் அவதி
ஓட்டை விழுந்துள்ளன பேருந்து
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழகம். காரைக்குடி மண்டலத்திற்குட்பட்டு, தேவகோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை உட்பட 11 கிளைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் பணிமனையில் இருந்து மராமத்து செய்து இயக்கப்பட்ட அரசு பேருந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சிவகங்கை சென்றுள்ளது. ஆனால், மராமத்து முறையாக செய்யப்படாததால், ஓட்டை உடைசலாகவும், அவசரகதியில் பூசப்பட்ட வார்னிஷ் வாடை, ஆங்காங்கே சிதறி கிடக்கும் ஆனிகள் என பயணிகளை அச்சுறுத்தி உள்ளது.
இதனை அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார், தற்போது இக்காட்சி வைரலாக பரவி வருகிறது.